சிட்னி: ஆஸ்திரேலியாவின் மலிவு விலை விமானச் சேவையான ஜெட்ஸ்டார் அதன் விமானத்திற்குள் இருக்கும் மேல்கூடங்களைப் பயன்படுத்த இனி பயணிகள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
வரும் 2027ஆம் ஆண்டிலிருந்து ஜெட்ஸ்டார் இதற்குக் கட்டணம் விதிக்கவுள்ளது.
பொதுவாகவே விமானப் பயணத்தின்போது எல்லா அம்சங்களுக்கும் கட்டணம் விதிக்கும் போக்கு தற்போது காணப்பட்டுவருகிறது. ஜெட்ஸ்டார் விதிக்கும் இந்தக் கட்டணம் அந்தப் போக்குக்கு ஏற்றவாறு அமைவதாகக் கூறப்படுகிறது.


