வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமான வலதுசாரி ஆர்வலரான சார்லி கெர்க்கை செப்டம்பர் 10 அன்று சுட்டுக் கொலைசெய்த சம்பவத்தில் கைதான 22 வயது டெய்லர் ராபின்சன் விசாரணையில் ஒத்துழைக்கவில்லை என்று யூட்டா மாநில ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் தெரிவித்துள்ளார்.
அதனால் அதிகாரிகள் டெய்லரின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் விசாரிக்கலாம் என்று ஆளுநர் ஞாயிறு (செப்டம்பர் 14) அன்று கூறினார். சந்தேக நபரைவிட அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் அதிக ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பட்டார்.
யூட்டா வேலி பல்கலைக்கழக வளாகத்தில் 3,000 பேர் கலந்துகொண்ட நிகழ்வில், எதனால் டைய்லர் ஒரு கட்டடக் கூரைமீது ஏறி கெர்க்கை சுட்டுக்கொலை செய்தார் என்பதை விசாரணையில் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
விசாரணைக் கைதியாகத் தொடர்ந்து யூட்டாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள டெய்லர்மீது செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) அதிகாரபூர்வமாகக் கொலைக் குற்றம் சாட்டப்படும்.
டெய்லர் வாழ்ந்த இடத்தில் அவருடன் அறையைப் பகிர்ந்துகொண்ட நண்பர் ஒருவர் விசாரணையில் முக்கிய அங்கம் வகிப்பதாக அதிகரிகள் கூறினர். அவர் குற்றவாளியின் ஒரினக் காதலராக இருக்கலாம் என்பதும் குற்றத்துக்குத் தொடர்பு இருக்கும் வாய்ப்புள்ளது.
ஏனெனில், துப்பாக்கியிலிருந்து பாய்ந்த தோட்டாக்களில் பொதுவுடமைக்கு எதிர்ப்பான ‘பாசிசவாதி’ போன்று குறிப்பிடப்பட்டுள்ளது முக்கிய தடயமாகக் கருதப்படுகிறது. மேலும் விவரமறிய டைய்லரின் வழக்கறிஞர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
டெய்லர், மின்னியல் கல்வி திட்டத்தில் டிக்ஸி தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவராவார். குற்றம் நடந்த இடத்திலிருந்து 33 மணிநேரத்துக்குப் பிறகு தென்மேற்கே 420 கி.மீட்டர் தொலைவில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.