தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சார்லி கிர்க் படுகொலை: அரசியல் நிலைப்பாடுகளால் சந்தேக நபர் கோபம்

2 mins read
f892b966-7553-42e3-88c3-5a47ea7d0939
சார்லி கிர்க் கொலையில் சந்தேக நபராகக் கருதப்படும் டைலர் ராபின்சனின் படம் ஒரு தொலைக்காட்சி திரையில் காட்டப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

அமெரிக்க அரசியல் விமர்சகர் சார்லி கிர்க்கின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆத்திரமடைந்த 22 வயது இளையர் ஒருவர், கிர்க்கின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தன்னைத்தானே காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3,000 கல்லூரி மாணவர்களுக்கு முன்னால் நடந்த  படுகொலையைத் தொடர்ந்து சந்தேக நபருக்கான தேடுதல் வேட்டையை இது முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த யூட்டா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், சந்தேகநபரான டைலர் ராபின்சன் கைது செய்யப்பட்டதை செய்தியாளர் கூட்டத்தின் தொடக்கத்தில் அறிவித்தார்.

130 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள கட்டடம் ஒன்றின் கூரையிலிருந்து கிர்க்கை சுட்ட பிறகு ராபின்சன், ஹெலிகாப்டர்கள், காவல்துறை கார்கள் மற்றும் தரைப்படையின் வீரர்களின் பார்வையில் தென்படாதவாறு 30 மணிநேரத்திற்கும் மேலாகத் தப்பிக்க முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் ராபின்சன் செப்டம்பர் 11 இரவு, காவல்துறையினரிடம் சரணடைந்தார். 

ராபின்சன் தனித்தே செயல்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் கடுமையான கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் ராபின்சன் அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவராக மாறிவிட்டதாக செப்டம்பர் 12 அன்று, அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கூறினார்.

சம்பவம் நடந்த வளாகத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ராபின்சன் விட்டுச்சென்ற துப்பாக்கிக் குண்டு உறையில் காணொளி விளையாட்டு சார்ந்த பல்வேறு செய்திகள் பொறிக்கப்பட்டிருந்தாகப் புலனாய்வாளர்கள் செப்டம்பர் 12 அன்று தெரிவித்தனர்.

 “ஹே பாசிஸ்ட்! கேட்ச்! (தீவிர ஆதிக்கக் கொள்கை உடையவனே, பிடித்துகொள்) ”என்று உறையில் எழுதப்பட்ட வாசகங்களில் ஒன்று. 

சார்லி கார்க்கின் அரசியல் கருத்துகள் தீவிர ஆதிக்கக் கொள்கையுடைய ஒன்றாக இருந்ததாகக் கவனிப்பாளர்கள் சிலர் கருதுகின்றனர்.

செப்டம்பர் 12 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில், ஆளுநர் காக்ஸ், மன்னிக்கும் நடைமுறைக்கு முழுமையான வேண்டுகோளை விடுத்தார். 

அரசியல் பதற்றத்தைக் குறைப்பதற்கான வழியையும் கண்டறியுமாறு திரு காக்ஸ் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பதிலுக்குப் பதில் வன்முறை, வெற்றுப்புணர்வை நாம் காட்டினால் அவை கிருமிபோலப் பரவிவிடும் என்றும் திரு காக்ஸ்  கூறினார்.

“ஏனென்றால், நாம் எப்போதும் மற்ற தரப்பைக் குறை சொல்லலாம். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின்னர்,  நாம் ஒரு மாற்று வழியைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்