கள்ளக் காதலியுடன் வாக்குப்பதிவு நிலையத்துக்குச் சென்ற கணவரைத் தாக்கிய மனைவி

கள்ளக் காதலியுடன் வாக்குப்பதிவு நிலையத்துக்குச் சென்ற கணவரைத் தாக்கிய மனைவி

1 mins read
c31fe734-c0af-4a22-b177-fe43740269b8
படம்: Facebook/ ข่าวสารเมืองปราการ v2 -

தாய்லாந்தில் மே 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது.

பரபரப்பாக இருந்த தேர்தலில் மேலும் பரப்பரப்பைக் கூட்டினர் ஒரு தம்பதி.

சமுத் பிரகார்ன் பகுதியில் கள்ளக் காதலியுடன் பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றார் 63 வயது ஆடவர்.

அப்போது அந்த ஆடவர் கையும் களவுமாக அவரின் 61 வயது மனைவியிடம் பிடிபட்டார்.

கணவனையும் கள்ளக்காதலியையும் அப்பெண் தாக்கத் தொடங்கினார்.

கணவரைக் கத்தியால் குத்தி துப்பாக்கியால் சுட்டார் அந்தப் பெண். கள்ளக்காதலி எந்த காயமில்லாமல் தப்பித்து ஓடினார்.

பிற்பகல் வாக்கில் நடந்த அந்தச் சம்பவம் அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்களிலும் பதிவானது.

சம்பவத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கடுமையான காயமடைந்த ஆடவரை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தமது கணவர் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பில் உள்ளதால் அவருக்குத் தகுந்த பாடம் புகுட்ட அவ்வாறு தாக்கியதாக கூறினார்.

பெண் மீது தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்