சிக்கன் டிக்கா மசாலாவைக் கண்டுபிடித்த சமையல் கலைஞர் அலி அகமது அஸ்லாம், பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் காலமானார். அவருக்கு வயது 77.
திங்கள்கிழமை காலை அவர் காலமானதாக அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் ஏஎஃப்பி செய்தித் தளத்திடம் கூறினார்.
வேகவைக்கப்பட்ட கோழிக்கறியில் பலவகை மசாலாவைச் சேர்த்து, தக்காளி சாறு, சூப்பையும் சேர்த்து தயாரித்து சமைக்கப்படுவது சிக்கன் டிக்கா மசாலா.
ஒரே மாதிரியான பெயரில், மாறுபட்ட சுவையில் கிடைக்கும் சிக்கன் டிக்கா மசாலாவை அலி அகமது அஸ்லாம் 1970களில் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
"அவர் தினமும் உணவகத்தில்தான் மதிய உணவைச் சாப்பிடுவார். உணவகம்தான் அவரது வாழ்க்கை. சமையல் நிபுணர்கள் அவருக்காக கறி சமைத்து கொடுப்பர். சிக்கன் டிக்கா மசாலாவை அவர் அடிக்கடி சாப்பிட்டாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது," என்றார் திரு அலியின் உடன்பிறப்பின் மகன் அகமது சொன்னார்.
தம்முடைய மனைவி, மூன்று மகன்கள், இரு மகள்களை திரு அலி விட்டுச்செல்கிறார்.


