பெர்லிஸ்: மலேசியாவின் பெர்லிஸ் மாநில முதல்வர் முகமது ஷுக்ரி ராம்லி, உடல்நலக் காரணங்களை முன்னிட்டு வியாழக்கிழமை (டிசம்பர் 25) பதவி விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
பெர்லிஸ் மன்னர் துவாங்கு சையது சிராஜுதீன் ஜமாலுல்லாயிலிடம் வியாழக்கிழமை பிற்பகல் தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.
மன்னரின் ஒப்புதலுக்குப் பிறகு தமது பதவி விலகல் நடப்புக்கு வரும் என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமது முடிவு குறித்துப் பரிசீலிக்கும் முழுப் பொறுப்பையும் பெர்லிஸ் மன்னரிடம் விட்டுவிட்டதாகக் கூறிய முதல்வர் ராம்லி, தமது பதவிக்காலத்தின்போது ஒத்துழைப்பு நல்கிய மாநில நிர்வாக ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

