தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் ஒரு மூன்று வயது குழந்தை அடுக்குமாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.
புத்தாண்டுக்காகத் தாங்கள் கோயிலுக்குச் சென்றதால் பெற்றோர் தங்களது குழந்தையை வீட்டில் விட்டுச்சென்றிருந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது. அதன் பிறகு அந்த ஆண் குழந்தை கட்டடத்தின் ஒன்பதாவது தளத்தில் உள்ள தனது வீட்டின் பால்கனி அறையிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.
வியாழக்கிழமை (ஜனவரி 1) அதிகாலை 1.25 மணியளவில் அவசர மருத்துவ உதவி வாகனத்துக்கு அழைப்பு வந்திருக்கிறது.
தங்கள் மகன் உறங்கிக்கொண்டிருந்ததாக நம்பியதால் அவனை வீட்டில் தனியாகவிடுத்து பெற்றோர் கோயிலுக்குச் சென்றதாகக் காவல்துறை குறிப்பிட்டது. விபத்து நிகழ்ந்தபோது அச்சிறுவன் வீட்டில் தனியாக இருந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

