சிறார் பாலியல் துன்புறுத்தல்; இலங்கை பெளத்த பிக்கு தற்காலிகப் பணிநீக்கம்

சிறார் பாலியல் துன்புறுத்தல்; இலங்கை பெளத்த பிக்கு தற்காலிகப் பணிநீக்கம்

இலங்கையின் மூத்த பெளத்த பிக்கு பல்லேகம ஹேமரத்ன
கோப்புப் படம்: ஏஎஃப்பி

31 May 2026 - 5:03 pm

1 mins read

கொழும்பு: இலங்கையின் பெளத்த சமய நிர்வாகம், 11 வயதுச் சிறுமியைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாக நம்பப்படும் மூத்த பெளத்த பிக்குவைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த விவகாரம், சமயங்கள் தொடர்பில் பழமைவாத எண்ணங்களைக் கொண்ட இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து 71 வயது பல்லேகம ஹேமரத்ன தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புத்தருக்கு அடைக்கலம் தந்ததாக நம்பப்படும் மரத்தின் இளம் வடிவத்திலிருந்து வளர்க்கப்பட்ட அத்திமரத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் பல்லேகம ஹேமரத்ன இருந்துவந்தார். அந்த மரம் புனிதமரமாக வழிபடப்படுகிறது.

“மல்வாட்டே அத்தியாயத்தின் (Malwatte Chapter) பிக்குக் குழு, குரு ஹேமரத்னவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது,” என்று தலைமை சமய குருக்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் இலங்கையின் அனுராதபுரா நகரில் இருக்கும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆலயத்தில் 11 வயதுச் சிறுமியை ஹேமரத்ன பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அனுராதபுரா, தலைநகர் கொழும்புக்கு வடக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அதன் தொடர்பில் இம்மாதம் ஒன்பதாம் தேதி காவல்துறை அவரைக் கைதுசெய்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்இலங்கைசமயம்நடவடிக்கைசட்டம்பணிநீக்கம்