தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் மறுநிர்மாணத்திற்கு சீனா உதவி: அதிபர் ஸி

1 mins read
dd75b29d-2b78-47f0-8779-ccd753577ccb
மியன்மாரின் மண்டலே பகுதியில் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடம். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்‌‌ஜிங்: சீன அதிபர் ஸி ஸின்பிங், அண்மை ஆண்டுகளில் மோசமான நிலநடுக்கத்தால் சிதைந்துபோன மியன்மாரின் மறுநிர்மாண முயற்சிகளுக்குக் கைகொடுக்க சனிக்கிழமை (மே 9) உறுதிகூறியுள்ளார். 

திரு ஸி, மியன்மார் ராணுவத் தலைவர் மின் அங் லைன்னை மாஸ்கோவில் சந்தித்து பல திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

மியன்மாரைப் பதம் பார்த்த இயற்கைப் பேரிடர், மின் ஆங் ஹிலெங்கின் நிலையை வலுப்படுத்தியுள்ளது. அரசாங்க ஆட்சியை அவரின் ராணுவ ஆட்சி கவிழ்த்ததை அடுத்து நான்கு ஆண்டுகள் அரசதந்திர ரீதியாக திரு மின் ஒதுக்கப்பட்டார்.

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் வட்டார வல்லரசு நாடுகளுடனான உறவுகளை மீண்டும் சரிசெய்துகொள்ள வழியமைத்துள்ளது. சீனா, இந்தியா, ர‌ஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிவாரணப் பொருள்கள், மீட்புப் பணியாளர்கள் உள்பட மில்லியன்கணக்கான உதவிப் பொருள்களை மியன்மாருக்கு வழங்கின.

சீனா முன்வைத்த மூன்று அனைத்துலகத் திட்டங்களையும் வரவேற்பதாக சொன்ன திரு மின், பொதுவான சவால்களைச் சமாளிக்க சீனாவுடன் இணைந்து பணியாற்ற மியன்மார் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்