பெய்ஜிங்: சீனாவின் நகர மேம்பாட்டுக்குப் புதிய அணுகுமுறை தேவை என்று அந்நாட்டின் அதிபர் ஸி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
நகர மறுசீரமைப்பு, திட்டமிடுதல், மேம்பாடு ஆகியவை தொடர்பாக திட்டமிட்டு செயல்படும் புதிய அணுகுமுறை அவசியம் என்றார் அவர்.
இந்தப் புதிய அணுகுமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நகரங்களில் உள்ள பாழடைந்த வீடுகளைச் சீனா படிப்படியாகப் புதுப்பிக்கும் என்று சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஸின்ஹுவா செய்தி நிறுவனம் திங்கட்கிழமையன்று (ஜூலை 14) தெரிவித்தது.
ஜூலை 13, 14ஆம் தேதிகளில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மத்திய நகரப் பணி மாநாடு நடைபெற்றதாக அது செய்தி வெளியிட்டது.
பெரிய நகரங்களில் உள்ள பழைய குடியிருப்புகளில் ஒரு மில்லியன் கட்டடங்கள் புதுப்பிக்கப்படும் என்று 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீன அரசாங்கம் உறுதி அளித்திருந்தது.