பெய்ஜிங்: அமெரிக்காவுடன் நடைமுறையில் உள்ள வர்த்தக உடன்பாட்டைச் சீனா தொடர முடிவு செய்துள்ளது.
பகுதி மின்கடத்திச் சில்லுக்கான கட்டுப்பாடுகள், என்விடியா நிறுவனத் தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங் தொடர்பான சர்ச்சை போன்றவற்றுக்கு இடையில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் காலியம், ஜெர்மானியம், ஆன்டிமனி ஆகிய முக்கியக் கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையைச் சீன வர்த்தக அமைச்சு நீட்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாதத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்த புதிய கட்டுப்பாடுகள், இரு நாடுகளின் உறவுக்கான சோதனையாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் துணை நிறுவனம் 50 போயிங் 737-8 விமானங்களை வாங்க ஒப்புக்கொண்டது. கடந்த 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு சீன நிறுவனம் வழங்கிய மிகப்பெரிய போயிங் ஆணை இதுவாகும்.
மே மாதம் நடந்த உச்சநிலை மாநாட்டில் அதிபர்கள் டோனல்ட் டிரம்ப், ஸி ஜின்பிங் இடையே எட்டப்பட்ட உறுதிமொழியை அது நிறைவேற்றுகிறது.
ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமை நிர்வாகியாக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து இந்த நகர்வுகள் அமைந்துள்ளன.
டிசம்பரில் ஃபுளோரிடாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அதிபர் டிரம்ப்பைச் சந்திக்கவுள்ளதால், பதிலடி நடவடிக்கைகளுக்குச் சீனா அவசரப்படவில்லை.
அமெரிக்காவுடன் நட்பாக இருக்கச் சீனா விரும்புவதாக வர்த்தக அமைச்சு ஆய்வாளர் ஸௌ மி கூறினார். அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீன நிறுவனங்களைப் பாதித்தால் எதிர்காலத்தில் பதிலடி கொடுக்கப் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
வரும் 2027ஆம் ஆண்டு நடக்கும் முக்கிய உள்நாட்டுத் தலைமைத்துவ மாநாட்டிற்குத் தயாராகும் அதிபர் ஸி ஜின்பிங், நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கு இடையே அமெரிக்க உறவைச் சீராக வைத்திருக்க விரும்புகிறார்.
இதற்கிடையே, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் சீனாவின் மேம்பட்ட கணினித் திறனில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாட்டுத் தரவு நிலையங்களிலிருந்து பெறப்படும். அவை பெரும்பாலும் வாடகை முறையில் இருக்கும். அதேபோல் மேலும் 7 விழுக்காடு சில்லுக் கடத்தல் மூலமும் கிடைக்கும் என வாஷிங்டன் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
