ஸ்பெயினில் ‘குளோரின்’ வாயு வெளியேற்றம்: ஆயிரக்கணக்கானோர் உள்ளரங்குகளில்

ஸ்பெயினில் ‘குளோரின்’ வாயு வெளியேற்றம்: ஆயிரக்கணக்கானோர் உள்ளரங்குகளில்

1 mins read
fd689e32-cb24-4662-a0c4-b46c634ad6ea
தொழில்துறைக் கிடங்கில் தீ மூண்டதால் இச்சம்பவம் நிகழ்ந்தது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மட்ரிட்: ஸ்பெயினில் உள்ள தொழில்துறைக் கிடங்கு ஒன்றில் சனிக்கிழமை (மே 10) தீ மூண்டதைத் தொடர்ந்து ‘குளோரின்’ (chlorine) நச்சு வாயு வெளியேறியது.

அதனால் பார்சிலோனா நகருக்கு அருகே 160,000க்கும் அதிகமானோரை வெளியில் நடமாட வேண்டாமென்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இச்சம்பவம் கடற்கரை நகரான விலானோவா ஐ லா கெல்ட்ரூவில் நிகழ்ந்தது. அந்நகரம் பார்சிலோனாவுக்குத் தெற்கே அமைந்துள்ளது.

நீச்சல் குளத்தைச் சுத்தம் செய்வதற்கான பொருள்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ மூண்டதாக அவ்வட்டாரத் தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது. சன்னல்களை மூடிக்கொள்ளுமாறு குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகள் மக்களுக்கு உத்தரவிட்டனர்.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நண்பகல்வாக்கில் கட்டுப்பாடுகள் மீட்டுக்கொள்ளப்பட்டன.

எனினும், ஆபத்து விளைவிக்கக்கூடிய சில பொருள்கள் காற்றில் எஞ்சியிருக்கும் அபாயம் இருந்ததால் சிறாரும் உடல்நலப் பிரச்சினைகள் இருப்போரும் தொடர்ந்து உட்புறங்களில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இச்சம்பவத்தில் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று தீயணைப்புப் பிரிவு சனிக்கிழமையன்று எக்ஸ் தளத்தில் தெரிவித்தது. லித்தியம் மின்கலனிலிருந்து தீ மூண்டிருக்கக்கூடும் என்று சம்பந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்