லெபனானில் காலரா பாதிப்பு

லெபனானில் காலரா பாதிப்பு

1 mins read
ad0a4b44-0681-4669-8fc5-7296b75232b4
இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் நிலைகுலைந்திருக்கும் பெலனானில் காலரா நோய் காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவும் சாத்தியம் அதிகம் இருப்பதாக அக்டோபர் 16ஆம் தேதியன்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெனீவா: லெபனானில் காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலராவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மிகக் கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இந்நோயின் காரணமாக மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுவாக, நோய்களை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளால் மாசடைந்த உணவு, பானத்தை உட்கொண்டால் காலரா நோய் ஏற்படக்கூடும் என்று அது கூறியது.

இந்நிலையில், இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் நிலைகுலைந்திருக்கும் பெலனானில் காலரா நோய் காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவும் சாத்தியம் அதிகம் இருப்பதாக அக்டோபர் 16ஆம் தேதியன்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

அக்டோபர் 14ஆம் தேதியன்று கடுமையான வயிற்றுப்போக்கு, நீரிழப்பு காரணமாக லெபனானியர் ஒருவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அவர் காலரா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியது.

லெபனானின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த அந்த நோயாளி அதற்கு முன்னதாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கவில்லை என்று அமைச்சு தெரிவித்தது.

எனவே, லெபனானில் அவருக்கு காலரா நோய் தொற்றியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் லெபனானில் முதல்முறையாக காலரா பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்