தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடிந்து விழுந்த பாலம்; அமிலம் ஏந்திய லாரி ஆற்றில் விழுந்தது, ஒருவர் மரணம்

1 mins read
c2b11b1f-4726-4664-b723-3e5217bd3656
ஒருவர் மாண்டதாகவும் மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் உள்ள இரு மாநிலங்களை இணைக்கும் பாலம் ஒன்று டிசம்பர் 22ஆம் தேதி இடிந்து விழுந்தது.

மரான்ஹாவ் மாநிலத்தில் உள்ள எஸ்டிரெய்ட்டோ நகரையும் டொக்கான்டிஸ் மாநிலத்தின் அக்குவியார்னொப்பொலிஸ் நகரையும் இணைக்கும் பாலத்தில் விபத்து நிகழ்ந்தது. அப்போது அப்பாலத்தில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.

அமிலம் ஏந்திய லாரி ஒன்று ஆற்றில் விழுந்ததில் ஆற்றில் சல்ஃபரிக் அமிலம் கசிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இச்சம்பவத்தில் ஒருவர் மாண்டதாகவும் மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்தகவல்களைப் பிரேசிலியத் தீயணைப்புப் படை வெளியிட்டது.

சம்பவம் நிகழ்வதற்கு சில வினாடிகள் முன்பு பாலத்தின் ஓரத்தில் இருந்த பிளவைக் காட்டி அதை உடனடியாகச் சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுக்கொண்டிருந்தார் இலாயஸ் ஜூனியர்.

இதையெல்லாம் அவர் காணொளி எடுத்துக்கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்தது.

அவர் அங்கிருந்து தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த காணொளியின் நம்பகத்தன்மையை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து நகரமன்ற அதிகாரியான திரு ஜூனியர் உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.

சம்பவத்தில் குறைந்தது 11 பேர் பாதிப்படைந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

50 மீட்டருக்கும் அதிகமான ஆழம் கொண்ட அந்த ஆற்றில் இரண்டு லாரிகள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை விழுந்தன.

குறிப்புச் சொற்கள்
பாலம்விபத்துஆறு