இடிந்து விழுந்த மிசிஸ்சிப்பி பாலம்; பலர் மரணம், காயம்

இடிந்து விழுந்த மிசிஸ்சிப்பி பாலம்; பலர் மரணம், காயம்

1 mins read
2139abc8-1512-42bc-9d91-f9445f839b92
ஆற்றுக்கு மேல் இருந்த அந்தப் பாலத்தை இடித்து அகற்றும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது அது எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததாக மிசிஸ்சிப்பி போக்குவரத்துத்துறை தெரிவித்தது. - படம்: தி நியூயார்க் டைம்ஸ்

மிசிஸ்சிப்பி: அமெரிக்காவின் மிசிஸ்சிப்பி மாநிலத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் மாண்டனர்.

பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் அமெரிக்க நேரப்படி அக்டோபர் மாதம் 16ஆம் தேதி பிற்பகல் நிகழ்ந்தது.

ஆற்றுக்கு மேல் இருந்த அந்தப் பாலத்தை இடித்து அகற்றும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது அது எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததாக மிசிஸ்சிப்பி போக்குவரத்துத்துறை தெரிவித்தது.

விபத்து காரணமாகப் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மாண்டோரின் குடும்பங்களுக்குத் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் போக்குவரத்துத்துறை கூறியது.

மாண்டோரின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

விபத்தில் மூவர் மாண்டுவிட்டதாகவும் நால்வர் படுகாயம் அடைந்ததாகவும் சிம்சன் கவுன்டியின் ஷெரிஃப் பால் முல்லின்ஸ் தெரிவித்தார்.

பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணமும் வெளியிடப்படவில்லை.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிசிஸ்சிப்பி போக்குவரத்துத்துறையின் செய்தித்தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கூடுதல் தகவல் கிடைத்ததும் அவை பகிர்ந்துகொள்ளப்படும் என்றார் அவர்.

பாலத்தை மாற்ற அங்கு கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 18ஆம் தேதியிலிருந்து அந்தப் பாலம் மூடப்பட்டிருந்ததாகவும் வாகனங்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்