தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுத்தைகளை அடுத்து இந்தியாவுக்கு வரவுள்ள நீர்யானைகள்

1 mins read
4547fc17-3140-4752-99e6-9865c6cb4225
படம்: ஏஎஃப்பி -

போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகளை இந்தியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்ப கொலம்பியா திட்டமிட்டு வருகிறது.

மாண்ட எஸ்கோபாருக்குச் சொந்தமான கிட்டத்தட்ட 150 நீர்யானைகள் இப்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இனப்பெருக்கம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், அடுத்த சில மாதங்களில் பாதி காண்டாமிருகங்களை வெளிநாடுகளில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு அனுப்ப கொலம்பிய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1980களில் எஸ்கோபார் சில நீர்யானைகளை வாங்கினார். 1993ஆம் ஆண்டில் அவர் மாண்ட பிறகு அந்த நீர்யானைகள் காடுகளில் விடப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக அவற்றின் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதால் மற்ற விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சிலமுறை அவை மனிதர்களையும் தாக்கியுள்ளன.

சென்ற ஆண்டு நீர்யானைகளுக்கு கருத்தடை செய்ய கொலம்பிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.