தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100% நியூசிலாந்து தயாரிப்பு என தகவல் தந்த நிறுவனத்திற்கு அபராதம்

2 mins read
1fcd04df-1497-4d97-92a1-05768cb656ca
உற்பத்தி குறித்து தவறான தகவல் தந்ததற்காக நியூசிலாந்து முன்னணி பால்பொருள் உற்பத்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

வெலிங்டன்: நியூசிலாந்தின் பால்பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்று, இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட வெண்ணெய்யை அதன் பால் பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தியது.

இருப்பினும் அந்த நிறுவனம், தனது உற்பத்திப் பொருள்கள் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் என்று விளம்பரம் செய்தது.

அதையடுத்து, மில்கியோ ஃபுட்ஸ் லிமிடெட் என்னும் அந்த நிறுவனத்தின் மீது நியூசிலாந்து வர்த்தக ஆணைக்குழு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை ஆகஸ்ட் 26ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், வாடிக்கையாளர்களுக்குத் தவறான தகவல் தந்த அந்தப் பால்பொருள் உற்பத்தி நிறுவனத்திற்கு 26,452 அமெரிக்க டாலர் (S$340,511) அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

ஹேமில்டன் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் அந்த நிறுவனம் அதன் பால்பொருள் தயாரிப்புகள் எந்த நாட்டில் இருந்து வந்தன என்பதைப் பற்றித் தெரிவிப்பதில் வாடிக்கையாளர்களுக்குத் தவறான தகவலைத் தந்துள்ளது. மேலும், சிங்கப்பூரிலிருந்து முக்கிய மூலப்பொருள்களை இறக்குமதி செய்திருந்தாலும் நூறு விழுக்காடு சுத்தமான நியூசிலாந்து தயாரிப்பு போன்ற தகவல் தவறானது என்று வர்த்தக ஆணைக்குழு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

நியூசிலாந்து பால்பொருள் ஏற்றுமதிகளில் முன்னணியில் உள்ளது. நியூசிலாந்தின் வளமான மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்த மாடுகளில் இருந்து பெறப்பட்ட பாலில் இருந்து செய்யப்பட்ட பால்பொருள்களுக்கு உலகெங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

மில்கியோ நிறுவனம் நாட்டின் நற்பெயரைச் சாதகமாகப் பயன்படுத்தி, தங்கள் சொந்தத் தயாரிப்புகளை ஊக்குவிக்க இந்த நியூசிலாந்தின் நற்பெயரை தவறாகப் பயன்படுத்திக்கொண்டது,” என்று வர்த்தக ஆணைக்குழு செய்தித் தொடர்பாளர் வனேசா ஹார்ன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்