ஆஸ்திரேலியாவில் சுறாவால் தாக்கப்பட்ட சிறுவனின் நிலை கவலைக்கிடம்

1 mins read
6dca09b5-ea5c-44eb-834c-1072e0c465f8
சிட்னியில் பெய்த கனத்த மழை காரணமாக உயர்ந்த நீர்மட்டத்தால் நகரின் துறைமுகத்துக்குள் சுறா புகுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரக் கடற்கரையில் சுறாவால் தாக்கப்பட்ட சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துளனர்.

சிட்னியில் பெய்த கனத்த மழை காரணமாக உயர்ந்த நீர்மட்டத்தால் நகரின் துறைமுகத்துக்குள் சுறா புகுந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

அண்மையில் பெய்த கனத்த மழை துறைமுகத்தில் வடிந்ததால் நீர் கலங்கலானதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

12 அல்லது 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் வோகுளுஸ் என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நீந்திக்கொண்டிருந்தபோது சுறாவால் தாக்கப்பட்டார்.

நண்பர்களால் உடனடியாகக் கடலிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் தன் இரண்டு கால்களிலும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

சிறுவனின் நண்பர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டதையும் அதிகாரிகள் பாராட்டினர்.

சிறுவன் தற்போது சிட்னி பிள்ளைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் 1791ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 1,280க்கும் மேற்பட்ட சுறா தாக்குதல் சம்பவங்கள் நேர்ந்துள்ளன. அவற்றால் 250க்கும் அதிகமான மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் ஓர் ஆண்டில் குறைந்தது 20 சுறா தாக்குதல்கள் நேர்கின்றன.

கடற்கரைகளில் அதிகரிக்கும் கூட்டம், அதிகரித்துவரும் கடல் வெப்பநிலை ஆகியவற்றால் சுறாக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்