கோலாலம்பூர்: மலேசியாவில் ஊழல் என்பது சமூகத்தின் எல்லா பக்கங்களுக்கும் பரவியிருக்கும் பிரச்சினை என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
மலேசியாவில் ஊழலை ஒழிக்க எல்லா தரப்பினரும் தொடர்ந்து ஈடுபாடுடனும் உறுதியான கடப்பாடுடனும் இருக்கவேண்டும் என்று திரு அன்வார் எடுத்துரைத்தார். இளம் தலைமுறையினரிடையே நல்ல கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும் போக்கை வளர்ப்பது அது சார்ந்த முயற்சிகளில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கட்டமைப்பில் ஊழல் ஊறிப்போய்விட்டதால் அதை எதிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எளிதல்ல என்றும் அவர் சுட்டினார். அதனால் தங்களுக்கு வரவேற்புள்ளதா என்பதற்கு முன்னுரிமை வழங்காமல் அரசாங்கம் தொடர்ந்து திடமாக முடிவெடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
