மலேசியாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை 5,000ஐ கடந்தது; புதிய சம்பவங்கள் குறைந்தன

மலேசியாவில் கிருமித்தொற்று எண்ணிக்கை 5,000ஐ கடந்தது; புதிய சம்பவங்கள் குறைந்தன

1 mins read
93c87696-7f9d-494a-9122-6bb0b227768a
மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ கடந்திருந்தாலும், கடந்த ஒரு மாத காலத்தில் முதல் முறையாக இன்று குறைவான எண்ணிக்கையில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் 14ஆம் தேதிக்குப் பிறகு அங்கு தினமும் 100க்கு அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ கடந்திருந்தாலும், கடந்த ஒரு மாத காலத்தில் முதல் முறையாக இன்று குறைவான எண்ணிக்கையில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் 14ஆம் தேதிக்குப் பிறகு அங்கு தினமும் 100க்கு அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 85 பேரையும் சேர்த்து பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,072.

இன்று புதிதாக 169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத் துறை பொதுச் செயலாளர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று நடைபெற்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதுவரை மலேசியாவில் 2,647 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொவிட்-19லிருந்து குணமடைவோரின் விகிதம் மலேசியாவில் 52.2% ஆக உள்ளது.

சிகிச்சை பெற்று வரும் 2,342 பேரும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் 56 பேரில் 32 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆகியுள்ளது. யுனிவர்சிட்டி மலாயா மெடிக்கல் சென்டரில் மார்ச் 21 முதல் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 6.41 மணிக்கு உயிரிழந்தார்.

அந்த மலேசிய ஆடவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

மலேசியாவில் மூன்றாவது நிலையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, இம்மாதம் 28ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்