கொவிட் காலத்தில் சேவை ரத்து: வாடிக்கையாளர்களுக்கு $95 மில்லியன் தரவுள்ள குவான்டாஸ்

கொவிட் காலத்தில் சேவை ரத்து: வாடிக்கையாளர்களுக்கு $95 மில்லியன் தரவுள்ள குவான்டாஸ்

1 mins read
aa3c2db5-6346-4820-9d9e-73b0d27178ab
குவான்டாஸ் விமானங்கள். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சிட்னி: கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ரத்துச் செய்யப்பட்ட விமானச் சேவைகளுக்காக குவான்டாஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு 105 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (95.1 மில்லியன் வெள்ளி) வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

கொவிட்-19 காலத்தில் வாடிக்கையாளர்களுக்குச் சரியான முறையில் இழப்பீடு தரவில்லை என்று வழக்குத் தொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து குவான்டாஸ் இந்நடவடிக்கையை எடுப்பதாக வெள்ளிக்கிழமை (மார்ச் 13) தெரிவிக்கப்பட்டது. 2020லிருந்து 2022ஆம் ஆண்டுவரை ரத்துச் செய்யப்பட்ட அனைத்துலக, உள்ளூர் விமானச் சேவைகளால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியப் பயணிகள், குவான்டாஸ் மீது வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

கட்டணத்தைத் திருப்பித் தருவதற்குப் பதிலாக குவான்டாஸ் விமான நிறுவனம் அனுகூலப் புள்ளிகளை வழங்கியிருந்தது.

இருப்பினும் ஒப்பந்தத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஒப்புக்கொள்ளப்பட்ட 105 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் தொகை அடுத்த ஆண்டு முற்பாதியில் நிதி நிர்வாகி ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் என்று குவான்டாஸ் தெரிவித்தது.

‘எக்கோ லா’ எனும் சட்ட நிறுவனம், குவான்டாஸ் மீது வழக்குத் தொடுத்திருந்தது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் எவ்வாறு தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை நீதிமன்றம் வரும் வாரங்களில் தெரியப்படுத்தும் என்று அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியது.

குறிப்புச் சொற்கள்