ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக கொவிட்-19 தொற்று உயர்ந்துள்ள வேளையில், பரிசோதனைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
ஆசிய பசிபிக்கில் கொவிட்-19 பரிசோதனைக் கருவிகளை வழங்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த நிறுவனமான ஃபேஸ் சயண்டிஃபிக் இன்டர்நேஷனலுக்கு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரிக்கி சியூ கூறினார். ஆசியாவெங்கிலும் கொவிட்-19 அலை வீசுவதே இதற்குக் காரணம்.
ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீனாவில் கொவிட்-19 அலை, கடந்த ஆண்டு கோடைக்காலத்தின்போது உச்சத்தில் இருந்த நிலையை நோக்கிச் செல்வதாக நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்புக்கான சீன நிலையத்தின் தரவு காட்டியது.
இதன் அடிப்படையில், ஆசியாவில் கொவிட்-19 பரிசோதனைக் கருவி, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை கூடியுள்ளது.

