தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19 தடுப்பூசி தாமதம்; ஆஸ்‌திரேலியாவுக்கு $26 பி. இழப்பு

1 mins read
c46eeb7b-64d3-4baf-8666-cf2cfec944ae
கடும் கட்டுபாடுகள் தேவையின்றி நீட்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்த இழப்பு ஏற்பட்டது என்று அரசாங்கம் ஆதரவில் செயல்பட்ட விசாரணைக் குழு அக்டோபர் 29ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்நாட்டுக்குக் குறைந்தபட்சம் 20 பில்லியன் அமெரிக்க டாலர் (S$ 24.68 பில்லியன்) இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் கட்டுபாடுகள் தேவையின்றி நீட்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதால் இந்த இழப்பு ஏற்பட்டது என்று அரசாங்கம் ஆதரவில் செயல்பட்ட விசாரணைக் குழு அக்டோபர் 29ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

ஆரம்பகட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசிகள் மெதுவாக விநியோகிக்கப்பட்டதாக அந்த 12 மாத விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு கட்டத்தில், கொவிட்-19 தடுப்பூசி விநியோகம் பந்தயமல்ல என்று ஆஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதை விசாரணைக் குழு சுட்டியது.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது மிகக் கடுமையான கட்டுபாடுகளை விதித்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு அதன் அனைத்துலக எல்லைகள் மூடப்பட்டிருந்தன.

முக்கிய நகரங்களில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்