இஸ்ரேல்- இத்தாலி தற்காப்பு உறவில் விரிசல்

இஸ்ரேல்- இத்தாலி தற்காப்பு உறவில் விரிசல்

1 mins read
a15e49f3-1da2-475c-bbb1-2b1ea367c9c5
இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ரோம்: இஸ்ரேலுடன் வழக்கமாக புதுப்பிக்கப்படும் தற்காப்பு உடன்பாடுகளை இத்தாலி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அதுதொடர்பாக இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தகவல் வெளியிட்டார். மத்திய கிழக்கில் நீடித்து வரும் பூசலையடுத்து இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

வலதுசாரியான திருவாட்டி மெலோனியின் அரசாங்கம் இஸ்ரேலுக்கு நெருக்கமான நட்பு நாடாகும். ஆனால் கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் லெபனான்மீது நடத்தும் தாக்குதலை இத்தாலிய அரசாங்கம் கண்டித்து வருகிறது.

திருவாட்டி மெலோனியின் முடிவால் இனி இஸ்ரேலுடனான ராணுவப் பயிற்சியில் இத்தாலி ஒத்துழைக்காது.

திருவாட்டி மெலோனி தனது வெளியுறவு மற்றும் தற்காப்பு அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகுதான் இனி இஸ்ரேலுடனான ராணுவப் பயிற்சியில் இத்தாலி ஒத்துழைக்காது என்று முடிவெடுத்ததாக எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்இத்தாலிஈரான்