தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உக்ரேனின் பெரிய அணையில் தாக்குதல்; வெள்ளம் ஏற்படும் அபாயம்

1 mins read
38127dd2-f16c-4722-a967-3170b9638f59
படம்: ராய்ட்டர்ஸ் -

ர‌ஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் தென் உக்ரேனில் உள்ள பெரிய அணை ஒன்றில் தாக்குதல் நடந்துள்ளது. அதில் அணை சேதமடைந்ததாகவும், அணையில் இருந்த தண்ணீர் வெளியேறிவருவதாகவும் கூறப்படுகிறது.

தண்ணீர் இரு நாட்டுப்பகுதிகளிலும் ஓடுவதாகவும் அதனால் பெரும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அது குறித்த படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

டினீப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா அணையை ர‌ஷ்யா வேண்டுமென்றே நிரம்பச் செய்து உடைத்து விட்டதாகவும், பாதிப்பு உள்ளாகும் இடத்தில் உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது.

அணை கிட்டத்தட்ட 30 மீட்டர் உயரமும் ஏறத்தாழ 3.2 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. அது 1956ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணையை 2014ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக்கொண்டது ர‌ஷ்யா.

அணை முழுமையாக சேதமடையவில்லை என்று உக்ரேன் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அணை உடைந்தால் அது மாபெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அணை சேதமடைந்தால் அருகில் உள்ள துறைமுகங்கள், விவசாய சேமிப்பு கிடங்குகள், போக்குவரத்து போன்ற பல முக்கியமான கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்