ஜோகூரின் பெல்டா பகுதியில் புலி நடமாட்டம்

ஜோகூரின் பெல்டா பகுதியில் புலி நடமாட்டம்

1 mins read
0d430bca-6ccf-4639-9286-efbf807a36d5
படம்: பிக்சாபே -

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் பெல்டா பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோத்த திங்கியின் பன்டி வனப்பகுதியில் சுற்றித்திரியும் புலி உணவுத் தேடி பெல்டா பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 100 கிலோகிராம் எடையுள்ள மூன்று பசுக்களை புலி கொன்றுள்ளது.

வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளதால் புலி உணவுத் தேடி மக்கள் இருக்கும் பகுதிக்கு வந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.

பன்டி காட்டிற்கும் பெல்டாவுக்கும் இடையே கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

பெல்டாவில் நிறைய பசுக்கள் உள்ளதால் புலி தனக்கு வேட்டையாட தகுந்த இடமாக இதைக்கருதியிருக்கலாம்.

புலி இன்னும் சில நாள்களில் காட்டிற்குத் திரும்பிவிடும் என்று அதிகாரிகள் கூறினர்.

புலி கிட்டத்தட்ட 200 கிலோகிராம் எடை இருக்கும் என்று எண்ணப்படுகிறது.

புலி கிராமத்திற்குள் இருப்பதால் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக அப்பகுதியில் வாழும் மக்கள் தற்போது கடும் பயத்தில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்