15 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடைக்குச் செக் குடியரசுப் பிரதமர் ஆதரவு

15 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடைக்குச் செக் குடியரசுப் பிரதமர் ஆதரவு

படம்: ஏஎஃப்பி

09 Feb 2026 - 7:18 pm

1 mins read

பிராக்: 15 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையை ஆதரிப்பதாகச் செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரே பபிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு பிரான்சை அவர் உதாரணம் காட்டினர்.

சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

“சமூக ஊடகம் சிறாருக்குக் கேடு விளைவிப்பதாக எனக்குத் தெரிந்த நிபுணர்கள் கூறுகின்றனர். நமது பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும்,” என்று காணொளி மூலம் தெரிவித்தார் பிரதமர் பபிஸ்.

இந்தக் காணொளி ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 8) எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்து திரு பபிஸ் தகவல் தெரிவிக்கவில்லை.

16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த ஆஸ்திரேலியா 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதியன்று தடை விதித்தது.

சிறுவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரான்ஸ், பிரிட்டன், போர்ச்சுகல், டென்மார்க், கிரேக்கம், போலந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் பரிசீலனை செய்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்