உக்ரேனுக்கு 89 பீரங்கி, சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொடுத்துள்ள செக் குடியரசு

உக்ரேனுக்கு 89 பீரங்கி, சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொடுத்துள்ள செக் குடியரசு

1 mins read
59f45169-0ac1-40ca-b2b5-5cd075adfa47
படம்: ஏஎஃப்பி -

செக் குடியரசு உக்ரேனுக்கு 89 பீரங்கி, நூற்றுக்கணக்கான சக்திவாய்ந்த ஆயுதங்கள், துப்பாக்கிகள் போன்றவற்றைக் கொடுத்துள்ளது.

உக்ரேனுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என்றும் செக் குடியரசு தெரிவித்துள்ளது.

உக்ரேன் மீது ர‌ஷ்யா படையெடுத்து ஓர் ஆண்டு நிறைவுபெற்றுள்ளது.

செக் குடியரசின் உதவிக்கு உக்ரேன் அதன் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது.

வரும் நாள்களில் ஆயுத உதவிகளை அதிகரிக்கவும் செக் குடியரசு உறுதியளித்துள்ளது.

தங்கள் நட்பு நாடுகளுக்கு நிதியுதவி, நிதி வளம் ராணுவத்தை மேம்படுத்துவது போன்ற உதவிகளை செய்ய செக் குடியரசு கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.