சிறுவனிடம் தமது நாக்கை உறிஞ்சு என்று சொன்ன சம்பவம்: தலாய் லாமா மன்னிப்பு கோரினார்

1 mins read
42f35a35-75ee-4002-889e-9742727092ed
படம்: டுவிட்டர் -

திபெத்திய மதபோதகர் தலாய் லாமா, சிறுவன் ஒருவனிடம் தமது நாக்கை உறிஞ்சு என்று சொன்ன சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அண்மையில் 87 வயது தலாய் லாமா, தர்மசாலாவில் தம்மைக் காண வந்த சிறுவனின் இதழில் முத்தம் கொடுத்தார். அதன்பின்னர் தமது நாக்கை உறிஞ்சும்படி சொன்னார்.

அந்த சம்பவம் தொடர்பான காணொளி வேகமாக சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து அச்சிறுவனிடமும் அவனது குடும்பத்தினருடனும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக டுவிட்டர் மூலம் தலாய் லாமா தகவல் வெளியிட்டார்.

விளையாட்டாக அந்தக் கருத்தைக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்ச்சையை ஏற்படுத்திய அந்த காணொளியைக் கண்ட பலரும் தலாய் லாமாவிற்கு எதிராகக் கருத்து பதிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்