கட்சி உள்செயல்முறையின் ஒரு பகுதியாக டிஏபி சிறப்பு மாநாடு அமையும்

கட்சி உள்செயல்முறையின் ஒரு பகுதியாக டிஏபி சிறப்பு மாநாடு அமையும்

1 mins read
a07ba5e8-8a51-4be8-bec3-086fef12dc51
தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்சியின் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான உள்செயல்முறையின் ஒரு பகுதியாக ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜனநாயகச் செயல் கட்சியின் (டிஏபி) சிறப்பு மாநாடு அமையும். இச்சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்து அக்கட்சி முன்னதாகவே அறிவித்துவிட்டதாக மடானி அரசாங்கத்தின் பேச்சாளரும் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்ததாகப் பெர்னாமா செய்தி கூறுகிறது.

“இது டிஏபியின் உள்செயல்முறை. கட்சிக்குள் அந்த முடிவு, அது பின்பற்றப்படுவது உறுதிசெய்யப்படும். எனவே, முடிவுகளை முன்னெடுப்பதில் டிஏபியின் செயல்முறை இதுவாகும்,’’ என்றார் அவர். செயல்படுத்தப்படும் முயற்சிகளை மடானி அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் புரிந்து கொள்வதோடு, டிஏபியில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகள், கட்சி உறுப்பினர்கள் அந்த முடிவுகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளதாக திரு ஃபஹ்மி குறிப்பிட்டார். மேலும், பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய கவனம் தற்போது நாட்டின் பொருளியலை வலுப்படுத்துவதும், அமைப்புமுறைச் சீர்திருத்தங்களை மேம்படுத்துவதுமாகும் என்றும் அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்