'மெர்டேக்கா 118' கோபுர உச்சியில் ஏறிய இருவர்; காவல்துறை விசாரணை (காணொளி)

'மெர்டேக்கா 118' கோபுர உச்சியில் ஏறிய இருவர்; காவல்துறை விசாரணை (காணொளி)

1 mins read
bb0b39ca-3f25-41f6-b91e-220d175d0090
-

மலேசியாவில் மெர்டேக்கா 118 வானுயர் கட்டட உச்சியின் மீது அனுமதியின்றி ஏறியதற்காக, ரஷ்ய இணையைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த இணை வாக்குமூலம் அளிக்க விரைவில் அழைக்கப்படுவார்கள் என கோலாலம்பூர் காவல்துறை துணைத் தலைவர் யஹ்யா ஓத்மான் தெரிவித்தார்.

கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததன் குற்றச்சாட்டு தொடர்பில் அவ்விருவரும் விசாரிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.

உலகின் இரண்டாவது உயரமான அந்தக் கட்டடத்தில் ஏறி நின்று அந்த இரு ரஷ்ய நாட்டவர்களும் முன்னதாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து, அக்கட்டடத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து மலேசியர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

View post on Instagram