டப்ளின்: அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையம், மெட்டாவின் கிளை நிறுவனத்துக்கு 251 மில்லியன் யூரோ (S$356 மில்லியன்) அபராதம் விதித்தது.
இது, உலகளவில் 29 மில்லியன் பயனர்களை பாதித்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு தனிப்பட்ட தரவுக்கசிவுச் சம்பவங்கள் தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடைபெற்ற பிறகு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பயனர்களின் முழுப் பெயர், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ மூன்று மில்லியன் பயனர்கள் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐரோப்பிய பொருளியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.