யங்கூன்: மியன்மாரின் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31க்கு அதிகரித்துள்ளது. 8 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கச்சின் வட்டாரத்தில் இருக்கும் ஜேட் சுரங்கத்தில் இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை நடந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் எதிர்பாராத வகையில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்துவிழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
கடந்த வார இறுதியில் அங்கு பெய்த தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

