ஆளும் கூட்டணியின் மாநாட்டுக்குப் பிறகு முடிவு: மலேசிய இந்திய மக்கள் கட்சி

ஆளும் கூட்டணியின் மாநாட்டுக்குப் பிறகு முடிவு: மலேசிய இந்திய மக்கள் கட்சி

2 mins read
அனைத்து மலேசியர்களும் மேம்படுவதற்கு இந்திய மக்கள் கட்சி பங்காற்றும்
09591f0b-6aaf-494d-8606-1da79f1c2bb5
ஜோகூரில் நான்கு தொகுதிகளையும் நெகிரி செம்பிலானில் மூன்று தொகுதிகளையும் போட்டியிடுவதற்காக மலேசிய இந்திய மக்கள் கட்சி் அடையாளம் கண்டுள்ளது. - படம்: மலேசிய இந்திய மக்கள் கட்சி

பெட்டாலிங் ஜெயா: ஆளும் பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) உச்சநிலைக் கூட்டத்திற்குப் பிறகு இந்திய மக்கள் கட்சியின் (எம்ஐபிபி) அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதன் தலைவர் என். சதீஷ்குமார் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சந்தித்த கட்சியின் மத்தியக் குழு, தேசிய அரசியல் நிலவரத்தையும் பல கட்சிகளுடன் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகள் பற்றியும் விவாதித்ததாகக் கூறினார்.

“இந்திய சமூகத்தின் நலனை முன்வைத்தும், கட்சியின் கோட்பாடுகளுக்கு இணங்கும் வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைவருக்கு மத்தியக் குழுவினால் முழு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதன்படி அரசியல் நிலைப்பாடு குறித்து தலைவர் எந்தப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தலாம்,” என்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையில் திரு புனிதன் தெளிவுபடுத்தினார்.

பெரிக்காத்தான் நேஷனல் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுக்குப் பிறகு, பாஸ் (பிஎஎஸ்), பக்கத்தான் ஹராப்பான் (பிஹெச்), பாரிசான் நேஷனல் (பிஎன்) ஆகிய கட்சிகள் இந்திய மக்கள் கட்சியுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள தொடர்புகள் மேற்கொண்டன.

இஸ்லாமியக் கட்சியான பாஸ், பெர்சத்துக் கூட்டணியில் இருந்து விலகியதால் அரசியல் நிலையற்ற தன்மை மலேசியாவில் ஏற்பட்டுள்ளது.

இந்தியர்களை அடிப்படையாகக் கொண்ட எம்ஐபிபி கட்சி, திரு புனிதனைத் துணைத் தலைவராகக் கொண்டு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. அக்கட்சிக்கு நாடாளுமன்றத்திலும் மாநிலங்களிலும் எந்தத் தொகுதியும் இல்லை.

இந்நிலையில் ஜோகூரில் நான்கு தொகுதிகளிலும் நெகிரி செம்பிலானில் மூன்று தொகுதிகளிலும் மலேசிய இந்திய மக்கள் கட்சி போட்டியிடத் திட்டமிடுகிறது என்று திரு புனிதன் தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழுவினர், ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் மக்களைச் சென்றடையும் இலக்குடன் முழுவீச்சில் அடித்தள நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

அரசியல் நிலைத்தன்மை

அரசியலில் நிலைத்தன்மை, தேசிய ஒற்றுமை, பொருளியல் மேம்பாடு ஆகியவை அனைத்துக் கட்சிகளுக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கவேண்டும் என்று தம் கட்சி நம்புவதாகத் திரு புனிதன் குறிப்பிட்டார்.

இந்தியர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் மேம்படுவதற்கு இந்திய மக்கள் கட்சி முக்கியப் பங்காற்றும் எனவும் அவர் உறுதி செய்தார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியர்மலேசியாஅரசியல்கட்சிஜோகூர்கூட்டணி