உணவில் காறி உமிழ்ந்த விநியோக ஊழியர்

உணவில் காறி உமிழ்ந்த விநியோக ஊழியர்

1 mins read
2970fc96-c167-4de1-88ce-df2680c724c7
உணவு விநியோக ஊழியர் உணவின்மீது மூன்று முறை எச்சில் துப்புவதைக் காணொளியில் காண முடிந்தது. - படம்: இணையம்

ஃபுளோரிடா: ‘டோர் டேஷ்’ என்னும் உணவு விநியோக நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் உணவில் உமிழ்வது போன்ற காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் நடந்தது.

உணவு விநியோக ஊழியர் உணவை வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு, அதற்கு ஆதாரமாகப் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டதை அந்த இணையத்தில் பரவிய காணொளியில் காண முடிந்தது.

View post on Instagram
 

ஆனால், அடுத்து அந்த ஊழியர் செய்தது சமூக ஊடகப் பயனர்களை முகம் சுளிக்க வைப்பதாக இருந்தது.

வாடிக்கையாளர் தனக்கு ஓர் அமெரிக்க டாலர்கூட அன்பளிப்பு அளிக்கவில்லை எனக் கூறிக்கொண்டே, அவர் அந்த உணவின்மீது உமிழ்வதைக் காணொளி காட்டியது.

குறிப்புச் சொற்கள்