ஜோகூரில் டெங்கி பாதிப்பு கிட்டத்தட்ட 40% அதிகரிப்பு

ஜோகூரில் டெங்கி பாதிப்பு கிட்டத்தட்ட 40% அதிகரிப்பு

1 mins read
cea3b671-d155-4c97-98ee-9eb35bd10601
2024ஆம் ஆண்டில் இதுவரை 11,480 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக ஜோகூர் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் லிங் தியேன் சூன் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் இதுவரை 11,480 பேருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக ஜோகூர் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் லிங் தியேன் சூன் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 39.4 விழுக்காடு அதிகம்.

கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 8,233 பேர் டெங்கியால் நோய்வாய்ப்பட்டனர்.

இவ்வாண்டு பாதிக்கப்பட்டவர்களில் 47 விழுக்காட்டினர் டெங்கி பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜோகூர் மாநிலத்திலேயே ஜோகூர் பாருவில்தான் அதிக டெங்கி பாதிப்பு பதிவாகி இருப்பதாக திரு லிங் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து கூலாய், மூவார், குளுவாங் ஆகிய இடங்களில் அதிக டெங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்