இலங்கையை அச்சுறுத்தும் டெங்கி; 44,000 பேர் பாதிப்பு

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கி; 44,000 பேர் பாதிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2026 - 9:23 pm

1 mins read

கொழும்பு: இலங்கையில் ஆக மோசமான அளவில் டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மட்டும் 44,000க்கும் அதிகமானவர்கள் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து குழந்தைகள் உட்பட 28 பேர் டெங்கியால் மாண்டனர்.

டெங்கிக் காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் போதுமான வசதிகள் இல்லாததாலும் மருத்துவமனைகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இலங்கையில் பருவகால மழை நேரங்களில் போது டெங்கிச் சம்பவங்கள் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால், இம்முறை டிட்வா புயல் காரணமாகச் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பால் எதிர்பாராத விதமாக டெங்கிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிட்வா புயல் இலங்கையைப் புரட்டிப்போட்டது.

கடந்த ஆண்டு இலங்கையில் மொத்தம் 51,000 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின.

குறிப்புச் சொற்கள்