அதிகரித்து வரும் எரிபொருள் விலையையும் மீறி, மெக்கோங் நாடுகளின் புத்தாண்டு உற்சாகம்

அதிகரித்து வரும் எரிபொருள் விலையையும் மீறி, மெக்கோங் நாடுகளின் புத்தாண்டு உற்சாகம்

2 mins read
7ec33de8-c2fc-4e7a-82de-5fff32040730
பல நாள்களாக, கம்போடியர்கள் புத்தாண்டுக்கு முன்னதாகத் தண்ணீரைத் தெளித்துக் கொண்டாடி வருகின்றனர். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

நோம்பென்: திங்கட்கிழமை (ஏப்ரல் 13) அன்று தொடங்கும் புத்தாண்டை வரவேற்க லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால், கம்பீரமான மெக்கோங் நதியை ஒட்டியுள்ள நாடுகளான கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து ஆகியவற்றில் உற்சாகமான கொண்டாட்டங்கள் முழு அளவில் பரவி வருகின்றன.

அடுத்த சில நாள்களுக்கு, கடுமையான எரிபொருள் நெருக்கடியுடன் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் இந்த வட்டாரத்தில் பௌத்த புத்தாண்டு விழாக்களான கம்போடியாவின் சௌல் ச்னம் த்மே (Chaul Chnam Thmey), லாவோஸின் பி மாய் (Pi Mai,), மியன்மாரின் திங்கியான் (Thingyan), தாய்லாந்தின் சொங்கிரான் (Songkran) ஆகியவை அப்பகுதி முழுவதும் உற்சாகத்தை அள்ளித் தெளிக்கவுள்ளன.

சுட்டெரிக்கும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம், விலை உயர்ந்த எரிபொருள், பணவீக்க அழுத்தம் அல்லது உலகளாவிய புவிசார் அரசியல் சலசலப்புகள் ஆகியவற்றால் சற்றும் கலங்காமல், கொண்டாட்டக்காரர்கள் நாள்காட்டியில் உள்ள மிக முக்கியமான இந்த விழாவை வரவேற்கின்றனர்.

கம்போடியாவில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நகரவாசிகள் பெருமளவில் வெளியேறி, குடும்ப பாரம்பரிய முறைப்படி இந்த விழாவைக் கொண்டாடுவதற்காகத் தங்களின் சொந்த மாகாணங்களை நோக்கிப் பயணம் செய்து வருகின்றனர்.

கெமர் புத்தாண்டு, தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்று குடும்பத்தினருடன் இருப்பதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது.

“இது குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பெரியோர்களைச் சந்திப்பதற்கும், பகோடாவிற்குச் செல்வதற்கும், முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், பௌத்த பாரம்பரியத்தின்படி புண்ணியச் செயல்களைச் செய்வதற்கும் உரிய நேரமாகும்,” என்று நோம்பென்னைச் சேர்ந்த பிரியா சிஹானூக் ராஜா பௌத்த பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான ஆராய்ச்சித் தலைவர் டாக்டர் சான் பிசித் பெர்னாமாவிடம் கூறினார்.

ஏப்ரல் மாதம் ஒரு சோகமான தொடக்கத்துடன் தொடங்கியது. ஏனெனில், இப்பகுதி முழுவதும் உள்ள அரசாங்கங்களும் சமூகங்களும் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்த எரிபொருள் விலையால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அதனுடன் போராடின.

பிப்ரவரி 28 முதல் தீவிரமடைந்த மத்திய கிழக்கு ராணுவ நெருக்கடியால் தூண்டப்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியானது பெட்ரோல், டீசல், திரவ பெட்ரோலிய விலைகளைக் கடுமையாக உயர்த்தியுள்ளது. இது தென்கிழக்கு ஆசியப் பொருளியல் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்