தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதன்முறையாக ஹாங்காங்கில் டைனோசர் புதைபடிமம் கண்டெடுப்பு

1 mins read
250625aa-bee4-4e47-8893-005dd8b942de
ஹாங்காங்கின் போர்ட் தீவில் புதைபடிமங்களைத் தோண்டி எடுக்கும் விஞ்ஞானி. - படம்: info.gov.hk

ஹாங்காங்: முதன்முறையாக ஹாங்காங்கில் டைனோசர் விலங்குகளின் புதைபடிமங்கள் (fossil) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங் அரசாங்கம் புதன்கிழமையன்று (அக்டோபர் 23) அத்தகவலை வெளியிட்டது. விஞ்ஞானிகள் கண்டெடுத்த அந்த புதைபடிமங்கள் எந்த வகை டைனோசரைச் சேர்ந்தவை என்பது தற்போதைக்குத் தெரியவில்லை என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது.

சம்பந்தப்பட்ட புதைபடிமங்கள், 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கிரெட்டசியஸ் (Cretaceous) காலத்தைச் சேர்ந்தவை என்று ஹாங்காங், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அந்தப் புதைபடிமங்கள், மிகப் பெரிய, பழைமையாக டைனோசர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

ஹாங்காங்கின் போர்ட் (Port) தீவில் டைனோசரின் அந்தப் புதைபடிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.

சுமார் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் மனிதர்கள் முதன்முதலாகத் தோன்றியதாக நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்