சுற்றுலாத் துறை வளர பாத்தாம்-பினாங்கு நகரங்களுக்கு நேரடி விமானச் சேவை

சுற்றுலாத் துறை வளர பாத்தாம்-பினாங்கு நகரங்களுக்கு நேரடி விமானச் சேவை

2 mins read
36ef3b83-9a01-4083-9a3d-05e0d3e898af
பினாங்கு மாநில சுற்றுலா, ஆக்கப்பூர்வ பொருளியல் செயற்குழு இந்தச் சேவையை அறிவித்துள்ளது. - படம்: சின்மிங் சீன ஊடகம்
Google News Preferred Icon

ஜார்ஜ்டவுன்: இந்தோனீசியாவின் ரியாவ் தீவுகளுடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இலக்குடன் பினாங்குக்கும் பாத்தாம் தீவுக்கும் நேரடி விமானச் சேவை இவ்வாண்டு அக்டோபர் 18ஆம் தேதி முதல் அறிமுகம் காண்கிறது.

பினாங்கு மாநில சுற்றுலா, ஆக்கப்பூர்வ பொருளியல் செயற்குழுத் தலைவர் வோங் ஹொன் வாய் இந்தத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) ஓர் அறிக்கையில் வெளியிட்டார்.

சிக்கனப் பயணங்களுக்கான மலேசியாவின் உள்நாட்டு ‘பாத்திக்ஏர்’ நிறுவனம் வாரம் மூன்று முறை இந்த நேரடி விமானச் சேவையை வழங்கும் எனவும் அவர் கூறினார்.

“இந்த விமான வழித்தடம் பினாங்குக்குப் பல புதிய சந்தைகளைத் திறந்துவிடுகிறது. இந்தோனீசியாவை மையப்படுத்திப் புதிய வருகையாளர்களை பினாங்குக்கு வரவேற்கும் முக்கிய முதல் படியாக இது அமையும்,” என்று அவரது அறிக்கையில் விவரித்தார்.

சிங்கப்பூரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் பாத்தாம் தீவு உள்ளது.பொருளியல், தொழில்துறை, வர்த்தகம், சுற்றுலா ஆகியவற்றின் மையமாகத் திகழும் பத்தாம், ரியாவ் தீவுக் கூட்டத்தின் அங்கமாகும். மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளையும் இணைக்கும் மத்தியப் புள்ளியாகவும் அது அமைந்துள்ளது

பினாங்குக்கு சுற்றுலா வரும் அனைத்துலகப் பயணிகளில் இந்தோனீசியர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். புதிய நேரடி விமானச் சேவை வழக்கமான சுற்றுலாப் பயணிகளுடன் மருத்துவ சிகிச்சை நாடி வருவோரின் எண்ணிக்கையைக் கூட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பினாங்கின் அனைத்துலக விமான நிலையத்தின் வழியாக இவ்வாண்டு ஜூலை மாதம் வரை 201,657 இந்தோனீசியர்கள் பினாங்குக்கு வருகை தந்ததாக திரு வோங் தெரிவித்தார். 2025ல் வந்த 192,823 இந்தோனீசியர்களைவிட அந்த எண்ணிக்கை 4.58 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்
பினாங்குஇந்தோனீசியாவிமானச் சேவைவிமான நிலையம்சிங்கப்பூர்மருத்துவம்வருகையாளர்