தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் இல்லாததால் 4 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்த டிஸ்னி

1 mins read
4f1548d9-4fe8-4fe3-9b66-b6c563041103
படம்: டுவிட்டர் -

ஒடிடி எனும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் இணையச் சேவைகள் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

இந்நிலையில் டிஸ்னி நிறுவனம் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 4 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்திற்கு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் இல்லாதது தான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முக்கே‌ஷ் அம்பானியின் ஜியோ சினிமா கடந்த காலாண்டில் மட்டும் புதிதாக 10 மில்லியனுக்கும் அதிகமான புது வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் ஜியோ சினிமா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் வாங்கியதுதான். கூடுதலாக அது ஆட்டங்களை இலவசமாகப் பார்க்கவும் அனுமதியளிக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தற்போது வரை மட்டும் 8.4 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை டிஸ்னி இழந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்