தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

4,232 குடும்பங்களுக்கு 8,000 கிலோ குர்பான் இறைச்சி விநியோகிப்பு

1 mins read
4091a16f-8b2b-4c57-b52d-f026a0b729d4
ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற முதல் விநியோகிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் ஃபைஷால் இப்ராஹிம், 120 குடியிருப்பாளர்களுக்கு குர்பான் இறைச்சியை நன்கொடையாக வழங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இம்மாதமும் அடுத்த மாதமும் ஏறக்குறைய 8,464 கிலோ இறைச்சி குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவிருக்கிறது.

முதல் விநியோகம் யூனோஸ் கிரசெண்ட் புளோக் 12ல் உள்ள வெற்றுத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், 120 குடியிருப்பாளர்களுக்கு உறையவைக்கப்பட்ட இறைச்சிப் பொட்டலங்களை விநியோகித்தார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்ட இறைச்சியை மக்கள் கழகத்துடனும் குடியிருப்பாளர் கட்டமைப்புடனும் சேர்ந்து ஜாமியா சிங்கப்பூர் ஏற்பாடு செய்த 2025ஆம் ஆண்டின் இபாடா குர்பான் பங்கேற்பாளர்கள் நன்கொடையாக வழங்குகின்றனர்.

மொத்தம் 4,232 குடும்பங்கள் தலா இரண்டு கிலோ உறயைவைக்கப்பட்ட இறைச்சியைப் பெறுவார்கள். இம்மாதம் முதல் ஆகஸ்ட் வரை தீவு முழுவதும் 28 தொகுதிகளில் இறைச்சி விநியோகிக்கப்படும்.

இந்நிகழ்வையொட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய இணைப் பேராசிரியர் ஃபைஷால், உள்ளூரில் அதிக பள்ளிவாசல்களில் குர்பான் சடங்கு இடம்பெற வேண்டும் என்று முஸ்லிம் சமூகத்திடமிருந்து வேண்டுகோள் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

2025ல் சிங்கப்பூரில் உள்ள ஆறு பள்ளிவாசல்களில் உள்ள இடங்கள் உள்ளூர் குர்பான் சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்