டாக்டர் மகாதீருக்கு 101வது பிறந்தநாள்

டாக்டர் மகாதீருக்கு 101வது பிறந்தநாள்

1 mins read
6c3f01ff-2d00-46fb-8946-54917f768ac4
அன்வார் இப்ராகிம் (இடது), 1993 முதல் 1998ஆம் ஆண்டு வரை டாக்டர் மகாதீர் முகமதுவின் (நடுவில்) அரசாங்கத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றினார். - படம்: ஃபேஸ்புக்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: வெள்ளிக்கிழமை (ஜூலை 10), 101வது வயதை எட்டிய மூத்த அரசியல் தலைவர் டாக்டர் மகாதீர் முகம்மதுக்கு, பிரதமர் அன்வார் இப்ராகிம் நல்விரும்பிகளுடன் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“துன் டாக்டர் மகாதீர் முகம்மது அவர்களுக்கு 101வது பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடனும் மிகுந்த கருணையுடனும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்,” என்று பக்கத்தான் ஹரப்பான் (பிஎச்) தலைவருமான திரு அன்வார் ஒரு சுருக்கமான ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

திரு அன்வார், மகாதீர் அரசாங்கத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றியபோது அவருடன் பகிர்ந்துகொண்ட ஒரு கலகலப்பான தருணத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

1993 முதல் 1998ஆம் ஆண்டு வரை திரு அன்வார், மகாதீர் அரசாங்கத்தில் துணைப் பிரதமராக இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சீர்திருத்த இயக்கம் (ரீஃபோமாசி) தோற்றம் கண்டது.

2022ஆம் ஆண்டு நவம்பரில் திரு அன்வார் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தும், ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய அங்கமான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளையும் அம்னோ கட்சியையும் மகாதீர் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
மகாதீர்அன்வார்பிறந்தநாள்ஒற்றுமை