தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த சர்ச்சை; டோனல்ட் டிரம்ப் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம்

1 mins read
7d0d4f9e-3041-45eb-ab28-adf1abab66f2
படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது விரைவில் நிதீமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரு டிரம்ப் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன் ஆபாசப் பட நடிகை ஸ்டராமி டேனியலுக்கு 130,000 அமெரிக்க டாலர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து அந்த நடிகை எந்த தகவலும் வெளியிடக்கூடாது என்பதற்காக டிரம்ப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை 76 வயது டிரம்ப் மறுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக திரு டிரம்ப் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால் அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவியில் இருந்தவர் மீது வழக்கு தொடரப்படுவது இதுவே முதல்முறை.

தமக்கும் டிரம்பிற்கும் 2006ஆம் ஆண்டு கள்ளத்தொடர்பு இருந்ததாக 2016ஆம் ஆண்டில் டேனியல் தகவல் வெளியிட்டார்.

கள்ளத்தொடர்பு இருந்ததற்கும், அதற்காக பணம் கொடுத்தற்கும் டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்படாது ஆனால் அவரின் கணக்கில் 130,000 டாலரைத் தவறாக கோடிட்டு காட்டியதால் அவர் மீது வழக்குத் தொடரப்படும் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்