தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 475 ஆண்டுகள் கழித்து குமுறிய எரிமலை

1 mins read
44a1f777-d746-422c-8628-3611f3368c36
ரஷ்யாவின் கிரஷ்னெனின்கோவ் எரிமலை 475 ஆண்டுகளில் முதல்முறையாகக் குமுறத் தொடங்கியுள்ளது. - படம்: ரஷ்ய ஊடகம்

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள எரிமலை 475 ஆண்டுகளில் முதல்முறையாகக் குமுறத் தொடங்கியுள்ளது.

கிரஷ்னெனின்கோவ் எரிமலை நேற்று வெடித்துச் சீறிய புகைப்படங்களை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 

இதற்கு முன்பு15ஆம் நூற்றாண்டில், அதாவது 1550ல் வெடித்துச் சிதறிய இந்த எரிமலை தற்போது மீண்டும் குமுறத் தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

வெடித்து சிதறிய அந்த எரிமலை கக்கிய சாம்பல் 6 கிலோமீட்டர் தொலைவுவரை எட்டியது என்றும் வேறு எந்த அச்சுறுத்தலும் நிகழவில்லை என்றும் அந்நாட்டின் அவசரகால அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எரிமலை அமைந்துள்ள வட்டாரத்தைக் கடந்த வாரம் 8.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதன் தொடர்பிலும் அதனைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையின் தாக்கத்தாலும் இந்த எரிமலைச் சீற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்