ரயில் விபத்து தொடர்பில் ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு: இந்தோனீசியா

ரயில் விபத்து தொடர்பில் ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு: இந்தோனீசியா

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நேர்ந்த ரயில் விபத்தில் 18 பெண்கள் மாண்டனர், 107 பேர் காயமுற்றனர்
படம்: ராய்ட்டர்ஸ்

29 Sep 2026 - 9:31 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியக் காவல்துறை, ஏப்ரலில் நேர்ந்த ரயில் விபத்து தொடர்பில் 37 வயது ஓட்டுநர்மீது செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) குற்றஞ்சாட்டியுள்ளது.

சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தத் தவறியதால் அந்த விபத்தில் 16 பெண்கள் மாண்டனர்.

இவ்வாண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பெக்காசி திமூர் நிலையத்தில் விபத்து நேர்ந்தது.

நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலின் பின்புறத்தில் இருந்த பெண்களுக்கான பெட்டிமீது மற்றொரு ரயில் மோதியது.

அதில் நொறுங்கிப்போன ரயில் பெட்டியிலிருந்து மாண்டோரை மீட்க மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் போராடினர்.

ஓடாமல் நின்றுகொண்டிருந்த ரயிலுக்கு மிக அருகில் வந்த பிறகே தாம் ஓட்டிய ரயிலை ஓட்டுநர் நிறுத்த முற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. அதுதொடர்பில் ஓட்டுநர்மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டன.

தூரத்தில் இருக்கும்போதே ரயிலை ஓட்டுநர் நிறுத்தியிருக்கலாம் என்று ஜகார்த்தா காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஓட்டுநரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

சம்பவத்தில் மேலும் 107 பேர் காயமடைந்ததாகத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் குழு அறிக்கை சுட்டியது.

சமிக்ஞை, தகவல் பரிமாற்றக் கட்டமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்விகளும் விபத்து காரணம் என்று அறிக்கை தெரிவித்தது.

இதற்கிடையே, ரயில் ஓட்டுநர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
ஜகார்த்தாரயில்ஓட்டுநர்விபத்து