வெள்ளை மாளிகை வாயிற்கதவில் மோதிய கார்; ஓட்டுநர் உயிரிழப்பு

வெள்ளை மாளிகை வாயிற்கதவில் மோதிய கார்; ஓட்டுநர் உயிரிழப்பு

1 mins read
020f6dee-9825-491b-be60-a569e28c24f9
இச்சம்பவத்தால் வெள்ளை மாளிகைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வாயிற்கதவு ஒன்றின்மீது கார் மோதியதில், அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் சனிக்கிழமை (மே 4) இரவு 10.30 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

“இரவு 10.30 மணிக்குச் சற்று முன்னதாக, அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயிற்கதவு ஒன்றின்மீது மோதியது,” என்று ‘எக்ஸ்’ ஊடகம் வழியாக வெள்ளை மாளிகையின் பாதுகாப்பிற்குப் பொறுப்பு வகிக்கும் அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆயினும், வெள்ளை மாளிகைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியது.

விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநர்க்கு உதவி வழங்க அதிகாரிகள் விரைந்தனர் என்றும் ஆனால் அவர் மாண்டுகிடந்த நிலையில் காணப்பட்டார் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அவ்வமைப்பின் ஆன்டனி கக்லியல்மி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காவெள்ளை மாளிகை