ஜோகூர் இரண்டாம் இணைப்பு விரைவுச்சாலையில் போக்குவரத்துக்கு எதிர்திசையில் சென்ற லாரி மோதியதில், சிங்கப்பூரில் பதிவான காரை ஓட்டிச் சென்ற ஆடவர் கடுமையான காயங்களின்றி உயிர் தப்பினார்.
கார் ஓட்டுநருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜோகூர் பாருவின் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகவும் இஸ்கந்தர் புத்திரியின் தலைமை காவல் அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 41 வயது லாரி ஓட்டுநர், மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் காரின் வலது பக்கக் கதவுகள் முழுமையாகச் சேதமடைந்துவிட்டதாக அறியப்படுகிறது.
கிலாங் பாத்தா ஓய்வு நிறுத்தத்தைத் தவறவிட்ட காரணத்தால் லாரி ஓட்டுநர் மெதுவாக பின்னோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சிங்கப்பூரின்வாகனமோட்டிகள் தங்களின் பயண, வாகன காப்புறுதித் திட்டங்களின் விவரங்களை நன்கு சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

