பெர்லினில் பொதுமக்களை மோதிய வாகன ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டார்

பெர்லினில் பொதுமக்களை மோதிய வாகன ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டார்

1 mins read
520d995e-f214-48dd-8dcd-809b4b3f04c1
மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் காயமடைந்தோருக்கு அவசர உதவி வழங்கினர். - படம்: ராய்ட்டர்ஸ்

பெர்லின்: ஜெர்மன் தலைநகர் பெர்லினில் சனிக்கிழமை (ஜூலை 25) நடந்த பொது நிகழ்ச்சியில் காரை ஓட்டிவந்து அங்கிருந்த பலரை மோதித் தள்ளிவிட்டு, ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார்.

டியர்கார்டன் பூங்காவில் நடந்த அச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் மோசமான நிலையில் உள்ளனர்.

கார் ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் ஆயினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் ஜெர்மானிய காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அந்த ஓட்டுநருக்கு இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக நம்புவதாகக் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று ஜெர்மன் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் உறுதி அளித்தார்.

ஆண்டுதோரும் நடக்கும் அந்த ‘கிரிஸ்டபர் ஸ்திரீட் டே பரேட்’ எனும் பங்கேற்பாளர்கள் சாலையில் ஒன்று கூடி அணிவகுத்துச் செல்லும் விழாவில் வெள்ள நிற வேன் ஒன்று கூட்டத்திற்குள் வேகமாகப் புகுந்து பலரை மோதியது.

பின்னர் அப்பகுதியிலிருந்த மரத்தின் மீது மோதி வாகனம் நின்றது. அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தலைமறைவான சந்தேகப் பேர்வழியைக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது. ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போருக்கான அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

குறிப்புச் சொற்கள்
ஜெர்மனிகார்மோதல்தீவிரவாதம்காவல்துறைமரணம்காயம்