ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இதில் 10 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்படும் 36 மலேசிய ஆடவரை ஜோகூர் காவல்துறை வலைவீசித் தேடுகிறது.
அவர் இன்னும் மலேசியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.
முதலில் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பிற்பகல், அடுக்குமாடி வீடு ஒன்றில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அங்கு நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறை ஆணையர் எம்.குமார் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அந்தக் கும்பல் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போதைப்பொருளைத் தயாரித்து பொட்டலம் கட்டியதாக ஆணையர் குமார் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தரை வீடு ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் திருமணமான தம்பதியர் கைது செய்யப்பட்டனர்
இன்னோர் அடுக்குமாடி வீட்டிலும் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
அங்கிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர்களில் ஐந்து மலேசிய ஆடவர்களும் இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
அவர்களில் ஆறு பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரியவந்ததாக ஆணையர் குமார் தெரிவித்தார்.

